திருச்சி- காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்

2 weeks ago 8

திருச்சி,

திருவாரூர் -கொரடாச்சேரி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் திருச்சி -காரைக்கால் டெமு ரெயில் சேவைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) மற்றும் மே 1-ந்தேதி ஆகிய நாட்களில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்தரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும். மேலும் தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மறு மார்க்கத்தில் காரைக்காலில் இருந்து ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1-ந்தேதிகளில் மதியம் 2.55 மணிக்குப் புறப்படும் காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் காரைக்கால் - தஞ்சாவூர் சந்திப்பு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் தஞ்சாவூர் ஜங்ஷனில் மாலை 5.32 மணிக்குப் புறப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.

 

Read Entire Article