திருச்சி: ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தல் - பெண் உள்பட 2 பேர் கைது

1 month ago 6

திருச்சி,

திருச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் 3 பண்டல்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளப்பட்டியில் வசித்து வரும் சரவணன் (வயது 45), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்பெருமாள் சுருள்தெரு குட்டிக்கரடு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மனைவி மஞ்சுளா என்ற மணிமேகலை (30) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் 12 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

Read Entire Article