திருச்சி அருகே வெளி மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்

3 months ago 13
திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ குட்காவை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்தனர். ரகசியத் தகவலின்பேரில் குறிப்பிட்ட அந்த காரை உப்பிலியாபுரத்துக்கு அருகே போலீசார் தடுக்க முயன்றபோது, கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் பக்கத்து ஊரில் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அளித்த தகவலின் பேரில், அவர்கள் சாலையின் குறுக்கே கற்களை வைத்து, காரில் இருந்த இரு வட மாநில இளைஞர்களையும் பிடிக்க வழிவகை செய்தனர். இதற்கிடையே, காரில் குழந்தை கடத்தப்பட்டதாக பரவிய வதந்தியால் அப்பகுதி மக்கள் காரை அடித்து நொறுக்கினர்.
Read Entire Article