திருக்காட்டுப்பள்ளி, ஜன.30: திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விடிந்து நீண்ட நேரம் ஆகியும் ெபய்யும் மூடுபணியால் வாகனங்கள் முகவிளக்குடன் மெதுவாக ஊர்ந்து ெசன்றன. தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் இன்று அதிக அளவில் மூடுபனி ஏற்பட்டுள்ளது. இதனால் மரம், செடி, கொடிகள், கட்டிடங்கள், அனைத்தையும் பனியால் மூடப்பட்டிருந்தது. மேலும், வயல்வெளிகள் எல்லாம் மூடுபனி நிறைந்து காணப்பட்டது. சாலைகளில் செல்லும் வாகனங்களில் முகப்பு விளக்குகள் எரிந்த வண்ணம் சென்றது. சாலைகளில் சென்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஒட்டிகளில் செல்வோர் அனைவரும் தங்கள் மேல் ஜெர்கின், ஸ்வட்டர், அணிந்து சென்றனர்.
இந்த மூடுபணியால் தற்பொழுது நடப்பட்டுள்ள சம்பா நெற்பயர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். நெற்பயிர்களில் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் இருந்தது. பணியின் காரணமாக விலங்குகள் தங்களது உறைவிடங்களைவிட்டு வெளியில் வரவில்லை. அதிகாலை முதலே பறவைகள் இறைவிடங்களில் இருந்து வராமல் மரங்களிலேயே இருந்தது. கடந்த வாரங்களுக்கு முன் மழை பெய்ததால் பணிமூட்டம் குறைவாக காணப்பட்டது. மழை விட்ட பிறகு பணி பொழிவு குறைவாக இருந்தது – ஆனால் நேற்று வழக்கத்தை விட அதிக அளவில் மூடு பணி இருந்தது.
The post திருக்காட்டுப்பள்ளியில் மூடுபணியால் முகப்பு விளக்கை ஔிரவிட்டபடி ஊர்ந்து ெசன்ற வாகனங்கள் appeared first on Dinakaran.