திரிவேணி சங்கமத்தில் சத்தீஷ்கார் முதல்-மந்திரி 13-ந்தேதி புனித நீராடல்

3 hours ago 2

ராய்ப்பூர்,

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி தொடங்கிய இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், தனது மந்திரிசபை உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் வரும் 13-ந்தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "144 வருடங்களுக்கு பிறகு நடக்கும் இந்த புனிதமான நிகழ்வில் நாங்களும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்று தெரிவித்தார். 

Read Entire Article