சென்னை: “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?” என்று தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு முன்புவரை அக்கட்சியுடனான கூட்டணி வாய்ப்புகள் குறித்து திறந்த மனதுடன் பேசிவந்த சீமான் மாநாட்டில் விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று பேசியதிலிருந்தே விமர்சனங்களை முன்வைக்கலாகினார். இப்போது வெளிப்படையாக மேடையிலேயே விஜய்யை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு நாளை ஒட்டி சென்னையில் நேற்று (நவ.1) நடந்த நாதக பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன ரெண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?. நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும்.