திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - உதயநிதி ஸ்டாலின்

2 months ago 11

தஞ்சை,

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி உள்ளனர். அதற்கு பதில் சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களே அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். திமுக கூட்டணியில் விரிசல் விழாதா என பிரிந்து கிடக்கும் அதிமுகவும், பாஜகவும் எதிர்பார்க்கிறார்கள்.

திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. நம்முடைய தொடர் வெற்றிதான் எதிரணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. 2026-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்து 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்பார் அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்றார்.

Read Entire Article