திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

2 days ago 3

குமாரபாளையம், மே 15: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019ல் நடந்த பாலியல் குற்றச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை தப்பவிடாமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக, அதிமுகவை சேர்ந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், நேற்று முன்தினம் கோவை நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வரவேற்று, குமாரபாளையத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர். நகர்மன்ற தலைவர் விஜயகண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர திமுக நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article