சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் எஸ்.எம். மதுரா செந்திலை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக கே.எஸ்.மூர்த்தி நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.