ஆலந்தூர்: பரங்கிமலை வடக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் மூவரசன்பட்டு சமுதாயக் கூடத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் சக்தி தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் செல்வராஜ், ராஜா, மஞ்சு ஜெயபால், பொருளாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜி.கே.விவேகானந்தன் பேசுகையில், முதல்வர் பிறந்தநாள் விழாவை ஒட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு கிளையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கல்வெட்டு அமைத்து திமுக கொடி ஏற்றி இனிப்பு வழங்கி தலா 1000 பேருக்கு வேட்டி, சேலை சிக்கன் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். விளையாட்டு போட்டி நடத்தி பரிசுகளை வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரசாத், மாவட்ட பிரதிநிதி புருஷோத்தமன் இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post திமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.