“திமுக கூட்டணியில் விவாதங்கள் உண்டு; விரிசல் இல்லை” - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

4 months ago 22

சென்னை: “எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவதாங்கள் நடப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்படவில்லை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். திருமண விழாவில் முதல்வர் பேசியதாவது: “தமிழகத்தில் மக்களால் போற்றப்படக்கூடிய ஆட்சியாக, திமுக ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. மக்களால் ஓரங்கட்டப்பட்டிருக்கக் கூடிய பழனிசாமி, திமுக அரசு இப்படியெல்லாம் சாதனைகளை செய்து, மக்களின் உள்ளத்தில் பதிந்துக் கொண்டிருக்கிறதே, இன்னும் அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்துகொண்டிருக்கிறதே என்ற பொறாமை காரணமாக திமுகவின் செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

Read Entire Article