நாமக்கல்: திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை விசிக தலைவர் திருமாவளவன் தவிர்க்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிய தாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமீபத்திய செயல்பாடுகள், திமுக கூட்டணி யில் குழப்பம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை திருமாவளவன் தவிர்க்க வேண்டும்.