திமுக கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை: கார்த்திக் சிதம்பரம்

1 month ago 5

புதுக்கோட்டை, மே 16: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருதரப்பினரையும் நேற்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் சொன்னது உண்மையா, பொய்யா என்பதை பிரதமரும் ராணுவ அமைச்சரும் தெளிவு படுத்த வேண்டும்.இந்த தாக்குதல் விவகாரத்தில் ராணுவ நடவடிக்கைகளை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும் இதை முழுமையாக ஆதரிப்பது தான் எங்கள் நிலைப்பாடு.

திமுக கூட்டணி எவ்வித சலசலப்பும் இன்றி வலுவாக தான் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் நடைபயணம் மேற்கொள்ள இருப்பது அவர்களது கட்சியின் நிலைப்பாடு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். எந்த கட்சியாக இருந்தாலும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள், அது அவரவர்களின் ஆசை. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதனால், தமிழக அரசு தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post திமுக கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை: கார்த்திக் சிதம்பரம் appeared first on Dinakaran.

Read Entire Article