சிவகங்கை, பிப். 23: திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் பொன்.இளங்கோவன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வசந்திசேங்கைமாறன் முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் சிறப்புரையாற்றினார். மணலூர், கீழடி, புலியூர், மேலவெள்ளூர், அல்லிநகரம், சங்கங்குளம் ஆகிய இடங்களில் பாக முகவர்கள் மற்றும் பாக முகவர் உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்ட விவசாய துணை அமைப்பாளர் சேகர், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், சங்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், ஒன்றிய கழக நிர்வாகிகள் ஈஸ்வரன், ரவி, சக்திமுருகன், ராமு, வெங்கடேசன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அண்ணாமலை மற்றும் பாகமுகவர்கள். கிளைச் செயலாளர் கலந்து கொண்டனர்.
The post திமுக கிளை செயலாளர் கூட்டம் appeared first on Dinakaran.