சென்னை,
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனை கூட்டம், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்ட நிலையில், திருச்சியில் விரைவில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.