சென்னை: திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களையும், மக்கள் படும் துன்பங்களையும் எடுத்துக்காட்டும் விதமாக எனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறேன். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில், சுற்றுப்பயணத்துக்கான பாடல், லோகோவை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என எம்ஜிஆர். அதிமுகவை தொடங்கினார், ஜெயலலிதாவும் அந்த வழியில் செயல்பட்டு தமிழகத்துக்கு சிறப்பான ஆட்சியை தந்தார். தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்தது கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி. அதனால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.