சென்னை: திமுக அரசு அமைந்தது முதல் 4 ஆண்டுகளில் முதல்வர் ஆணையின்படி 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். 86,000 பேருக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. பட்டா உரிமையை ஏழை-எளிய-நடுத்தர குடும்பத்து மக்களுக்கு தங்கு தடையின்றி உறுதி செய்து வருகிறது திராவிட மாடல் அரசு. நம் திராவிட மாடல் அரசின் பயணம் தொய்வின்றி தொடர முதலமைச்சர் பல்வேறு ஆலோசனை வழங்கினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
The post திமுக அரசு அமைந்தது முதல் 4 ஆண்டுகளில் முதல்வர் ஆணையின்படி 12.29 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.