தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது

1 month ago 16

சென்னை: தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை கண்ட நிலையில் நேற்று பெயரளவுக்கு பவுனுக்கு ரூ.40 குறைந்தது. 27ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தில் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 7 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.7,095க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.56,760க்கு விற்கப்பட்டது. அதிகரித்தால் ஜெட் வேகமும், குறைந்தால் மட்டும் பெயரளவுக்கு என்பது நகை வாங்குவோரை ஏமாற்றமடைய செய்துள்ளது. நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article