
திருப்பூர் ராயபுரம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.