
ஈரோடு மூலப்பாளையம் பாரதி நகரில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ரோட்டில் சென்றது.
இதுகுறித்து நேற்று முன்தினம் தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். குழாய் உடைப்பு ஏற்பட்டு இருந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி குழாய் உடைப்பை சரி செய்தனர்.
நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.