திண்டுக்கல், டிச. 25: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டிவிசன் பிரிவில் கொடைக்கானல் கே.எப்.டபிள்யூ.ஏ. அணி, திண்டுக்கல் செயின்ட் ஜோசப் மில்ஸ் அணி யை 5:1 என்ற கோல் கணக்கில் வென்றது. திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அணி, சச்சின் சாக்ஸஸ் அணியை 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஸ்டார் கால்பந்து அணி, வத்தலக்குண்டு ராயல் அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வென்றது. கொடைக்கானல் கே.எப்.டபிள்யூ.ஏ. அணி, திண்டுக்கல் செவன் டாலர்ஸ் அணிக்கு இடையான போட்டி கோல்கள் இன்றி டிராவில் முடிவடைந்தது. ஸ்டார் கால்பந்து அணி, செயின்ட் மைக்கேல் அணியை 5:0 என்ற கோல் கணக்கில் வென்றது. இத்தகவலை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
The post திண்டுக்கல்லில் மாவட்ட லீக் கால்பந்து போட்டி appeared first on Dinakaran.