திண்டுக்கல், ஜன 14: திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-2026ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகிவற்றிற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 2025-2026ஆம் கல்வியாண்டிற்க்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8000 செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்.28.தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் பெற www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம், Email ID: [email protected] மற்றும் தொலைபேசி எண்: 044-22501006, 044-22501113 மூலம் தெரிந்து கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.
The post திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.