திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

1 week ago 4

திண்டுக்கல்,

திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக குதிரையாறு மற்றும் பாலாறு பொருந்தலாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தொடர்பாக செய்தி, மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"திண்டுக்கல் மாவட்டம். பழனி வட்டம், ஆண்டிபட்டி கிராமம். குதிரையாறு அணையின் இடது பிரதானக் கால்வாய் மற்றும் பழைய பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 1981.59 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் 2863.86 ஏக்கர் நிலங்கள் முதல்போக பாசனம் பெறும் வகையில் 15.11.2024 முதல் 15.03.2025 வரை 120 நாட்களுக்கு இடது பிரதானக்கால்வாய் வழியாக 103.68 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், 5 அணைக்கட்டுகளின் பாசனப் பரப்பு மற்றும் நேரடி பாசனப்பரப்பிற்கு 165.89 மில்லியன் அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 296.53 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பழனி மற்றும் மடத்துக்குளம் வட்டங்களிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும்.

அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம். தாடாகுளம் பாசனப்பரப்பான 844 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 6168 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் 7012 ஏக்கர் பழையப் பாசன நிலங்களுக்கு முதல்போக பாசனத்திற்கு 15.11.2024 முதல் 15.03.2025 முடிய 120 நாட்களுக்கு, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நீரிழப்பு உட்பட 1464.56 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம். புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமங்களிலுள்ள பாசன பயன்பெறும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read Entire Article