திட்டக்குடி : சாலை விபத்தில் பெண் பலி - குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது சோகம்

3 hours ago 1

திட்டக்குடி,

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. திட்டக்குடி அருகே வாகனம் சென்றுகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைதடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தில் இருந்த மரிக்கொழுந்து (45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் அந்த வாகனத்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டேர் பலத்த காயமடைந்தனர்.

இவர் இன்று காலை தனது உறவினர்களுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்தானது ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article