சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் திடீரென நீல நிறத்தில் ஒளிர்ந்ததை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் இந்த நீல நிற கடல் அலைகள் தென்பட்டுள்ளன.
ஒருவகை பாக்டீரியா, பூஞ்சை, பாசிகள், பூச்சிகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களால் ஏற்படும் பயோலுமினென்சென்ஸ் என்ற மாற்றமே இந்த நீல நிற ஒளிக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.