தி.மு.க.வுக்கு உதவவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

2 hours ago 3

புதுச்சேரி,

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே மறைமலையடிகள் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவரது பிறந்தநாளையொட்டி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2026-ல் தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். ஈரோடு இடைத்தேர்தல் தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைக்கப்போவதில்லை. ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம்.

இரட்டை இலை சின்னம் இருந்தும் தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்ய தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது. தோல்வி பயத்தினால் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்தனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி என்ற சுயநலமிக்க மனிதரின் ஆட்டம் ஓய்ந்துவிடும். அ.தி.மு.க.வை மீட்டெடுத்து பலப்படுத்தும் கட்டாயம் அ.ம.மு.க. தொண்டர்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article