
சென்னை,
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பா த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "டாஸ்மாக் மோசடி குறித்து அமலாக்கத்துறை பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளை பார்த்தால், தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவுக்கு இருக்கிறது" என்று விஜய் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"விஜய் கூறியது சரிதான். தி.மு.க.வின் ஊழல் குறித்து புத்தகம் எழுதுவது மட்டுமல்ல, திரைப்படமே கூட எடுக்கலாம். தமிழக பட்ஜெட்டில் இருப்பதை இருக்கிறது என்று சொல்கிறோம், இல்லாததை இல்லை என்று சொல்கிறோம். மற்றபடி 'ரூ' போட்ட பட்ஜெட், 'ஓ' போட முடியாதபடி இருக்கிறது."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.