தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - இன்று நடக்கிறது

6 hours ago 1

சென்னை,

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ஆளுங்கட்சியான திமுக முன்கூட்டியே தயாராகி வருகிறது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 28-ந்தேதி (இன்று) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டம் "ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை'' ஆகிய பொருளை மையமாக கொண்டு நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read Entire Article