
சென்னை,
மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது,
பிரதமர் மோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அது தான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர். அவர் சொல்வதுதான் வேதவாக்கு.
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறும் சூழலில் இருக்கிறது. தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது.எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது.
இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டது. இந்த அரசுக்கு தமிழக மக்கள் மீது எந்த நலனும் இல்லை. 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.இவ்வாறு கூறினார்.