ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளப்பாடி அருகே உள்ள கும்டாபுரம் மலைகிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த தீபாவளி முடிந்த 3வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணத்தை பூசிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கென சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால் நடைகளின் சாணம் கோவிலின் பின்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கோவிலுக்கு அருகே உள்ள குளத்திற்கு பீரேஸ்வரர் சாமியை ஒருத்தலமாக எடுத்து சென்ற பக்தர்கள் நீராட செய்தனர். அதன் பின்னர் கழுதை மேல் வைத்து கோயிலுக்கு எடுத்து சென்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதை தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்தை உருண்டையாக உருட்டி பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் பூசியும், வீசியும், நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த வழிபாட்டால் ஊர் மக்கள், கால்நடைகள், நலம் பெறுவதுடன் விவசாயமும் செழிப்பாக இருக்கும். சாணத்தை உடலில் பூசுவதன் மூலம் உடலில் உள்ள நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சாணியடி திருவிழாவுக்கு பிறகு அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு பக்தர்கள் பீரேஸ்வரரை வணங்கி சென்றனர். மேலும் பக்தர்கள் விளையாடிய சாணத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் எடுத்து சென்று தங்கள் விலை நிலங்களில் இட்டனர். 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இத்திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 1000 கணக்கான பக்தர்களும் பங்கேற்றனர்.
The post தாளவாடி பீரேஸ்வரர் கோயிலில் சாணியடித் திருவிழா: சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.