தாலி தோஷத்தை நிவர்த்தி செய்வதாக கூறி 10 சவரன் நகை அபகரிப்பு

2 months ago 10
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே முல்லைவாசல் கிராமத்தில் தாலி தோஷத்தை நிவர்த்தி செய்வதாக கூறி பூஜை செய்து 10 சவரன் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற 85 வயது மதிக்கத்தக்க போலி சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். தனக்கு வீடு கட்ட வேண்டும் எனக் கூறி கட்டடத் தொழிலாளியான பிரபு வீட்டிற்கு வந்த முதியவர், தனக்கு ஜோதிடம் தெரியும் என கூறி பிரபுவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி பரிகார பூஜை செய்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த நகைகளை துணியில் சுருட்டி எடுத்து வருமாறு கூறிய முதியவர், பூஜை முடிந்த பிறகு நகை பையை பிரபுவின் மனைவியிடம் கொடுத்துள்ளார். முதியவரை அழைத்துச் சென்று நீடாமங்கலம் பேருந்து நிலையத்தில் விட்டு வந்தபிறகு, நகை மூட்டையை பிரித்தபோது அதில் கருங்கல் ஜல்லிகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பிரபு நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Read Entire Article