தார் வச்சிருகேன்ல.. தண்ணீரில் சும்மா சர்ர்ன்னு போயிருவேன்.. தள்ளுமாடல் வண்டியான சோகம்..! அப்ப சொன்னதெல்லாம் பொய்யா..?

1 month ago 7
சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட நிலையில், மகிந்திரா தார் வாகனம் ஓட்டி வந்த நபர், சொல் பேச்சு கேளாமல் தண்ணீரில் காருடன் இறங்கிய நிலையில், நடுவழியில் கார் நின்று போனதால் தள்ளியும் கயிறு கட்டியும் இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது மகிந்திரா நிறுவனத்தின் தார் வாகனம் 650 மில்லி மீட்டர் அளவுக்கு தேங்கிய தண்ணீரிலும் சீறிப்பாய்ந்து செல்லும் திறன் மிக்கது என்று சொல்லப்பட்டதால் பலர் மழைகாலங்களில் தார் வாகனத்தை நம்பிக்கையுடன் மழை நீரில் ஓட்டிச் செல்கின்றனர். அந்த வகையில் சென்னையில் தார் வாகனத்தை நம்பி தண்ணீருக்குள் ஓட்டிச்சென்ற இளைஞர் ஒருவர் தண்ணீரில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. சென்னையில் தொடர்ச்சியாக விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் புற நகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது . சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் மழை நீர் இடுப்பளவிற்கு தேங்கிய நிலையில் வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்தனர். அப்போது தார் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் தனது வாகனம் தண்ணீரில் போட் போல சர்ரென செல்லும் எனக்கூறி சொல்பேச்சு கேளாமல் தேங்கி இருந்த தண்ணீருக்குள் தனது தார் வாகனத்தை இறக்கி டிரைவ் செய்தார். சரியாக நடுப்பகுதியில் முக்கி முனங்கிய தார், தண்ணீரில் நகராமல் சிக்கிக் கொண்டது இதையடுத்து தண்ணீரில் சிக்கிய தார் வாகனத்தை பாரம்பரிய முறைப்படி தள்ளிச்செல்லும் நிலை ஏற்பட்டது தொடந்து சுரங்கப்பாதைக்கு மேல தள்ளிச்செல்ல சிரமம் ஏற்பட்டதால், இழுவை சக்தி மிக்க மற்றொரு தார் வாகனத்தை கொண்டு வந்து அதனை இழுத்துச்செல்லும் நிலை ஏற்பட்டது பழைய மாடல் தார் என்பதால் தண்ணீரில் சிக்கி இருக்கலாம் என்ற மோட்டார் வாகன விமர்சகர்கள், ஓட்டுனரின் திறமையை பொறுத்து தண்ணீரில் செல்லும் திறன் மாறுபடும் என்றனர். மேலும் ஆழம் தெரியாமல் வாகனங்களை மழை நீரில் இறக்கினால் பெரிய அளவில் செலவுகளை இழுத்து வைத்து விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
Read Entire Article