தாராபுரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு

2 months ago 10

 

தாராபுரம்,நவ.18: தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிக்கான புதிய வாக்காளர்களை சேர்த்தல்,நீக்குதல் மற்றும் பெயர்,முகவரி திருத்தம் செய்வது உள்ளிட்டவைகளுக்கான முகாம் அந்தந்தப் பகுதி வாக்குச் சாவடிளில் நடைபெற்றது. தாராபுரம் சித்தராவுத்தன் பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,நகராட்சி பள்ளி, சிஎஸ்ஐ பெண்கள் பள்ளி, உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடைபெற்ற இம்முகாமினை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு முகாமில் பணியாற்றி வரும் திமுக நிர்வாகிகளுக்கும்,அரசு துறை சார்ந்த அலுவலர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.  சிறப்பு முகாம் ஆய்வின் போது தாராபுரம் திமுக நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட வழக்கறிஞரின் தலைவர் செல்வராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

The post தாராபுரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article