தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சு திணறி சாவு

2 months ago 15

 

மூணாறு, செப். 30: கேரளா மாநிலம் மூணாறில் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சைலன்ட்வாலி எஸ்டேட், முதல் டிவிஷனை சேர்ந்த வினோத், ஷக்கினா தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்து 50 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில் குழந்தைக்கு தாய்பால் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு காலை 7:00 மணிக்கு குழந்தையை பார்த்தபோது அசைவற்ற நிலையில் கிடந்துள்ளது. உடனடியாக மூணாறில் உள்ள டாடா ஹை ரேஞ்சு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். குழந்தைக்கு பால் கொடுத்தபோது அது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்தது. இச்சம்பவத்தில் தேவிகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சு திணறி சாவு appeared first on Dinakaran.

Read Entire Article