தாயை மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற கொடூர மகன்கள் - அதிர்ச்சி சம்பவம்

2 months ago 20

அகர்தலா,

திரிபுரா மாநிலம் மேற்கு திரிபுரா மாவட்டம் கம்பரி பகுதியை சேர்ந்த 62 வயது பெண் தனது 2 மகன்களுடன் வாழ்ந்து வந்தார். அப்பெண்ணின் கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்ததால் மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாயாருக்கும் அவரது 2 மகன்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 2 மகன்களும் பெற்ற தாயை வீட்டின் அருகே உள்ள மரத்தில் கட்டி வைத்து உயிரோடு தீ வைத்து எரித்துக்கொன்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாயை தீவைத்து எரித்துக்கொன்றுவிட்டு தப்பியோடிய 2 மகன்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பெயர் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.   

Read Entire Article