தாயகம் திரும்பிய மக்கள், நில ஆவணம் கடவுச்சீட்டுகளை திரும்ப பெறலாம்

4 weeks ago 5

 

ஊட்டி, டிச.16: தாயகம் திரும்பிய மக்கள் வீட்டு கடன்கள் பெற்றதற்காக தங்களது நில ஆவணம் மற்றும் கடவு சீட்டு உள்ளிட்டவற்றை திரும்ப பெற அணுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: பர்மா மற்றும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவுசீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் அவற்றில் உள்ள கடன் வழங்கப்பட்டது.

தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியோர்களிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட பயனாளிகள் தகுந்த ஆவணங்களுடன் தங்களது மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தாங்கள் கடன் பெற்ற வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்டிஓ) அலுவலகத்தினை அணுகலாம். இவ்வாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

The post தாயகம் திரும்பிய மக்கள், நில ஆவணம் கடவுச்சீட்டுகளை திரும்ப பெறலாம் appeared first on Dinakaran.

Read Entire Article