தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறதா? நவ.10ல் ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு

4 months ago 15

மதுரை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிய மனு நேற்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா நேரில் ஆஜரானார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

எனவே, விரைவில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும்’’ என்றார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக வரும் நவ.10ம் தேதி (ஞாயிறு) நேரில் ஆய்வு செய்கிறோம். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசு வக்கீல்கள் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை நவ.15க்கு தள்ளி வைத்தனர்.

 

The post தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறதா? நவ.10ல் ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article