தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக நீதிபதிகள் ஆய்வு..

2 months ago 11
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யச் சென்ற நீதிபதிகளின் வாகனத்தை மறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் நேரில் சென்று நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், சிந்து பூந்துறை, உடையார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அன்னை வேளாங்கண்ணி நகர் மக்கள் நீதிபதிகளின் வாகனத்தை வழிமறித்து தங்களது பகுதியில் செயல்படும் சுத்திகரிப்பு நிலையத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர்.
Read Entire Article