தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார் ஆளுநர்: வேல்முருகன் எம்எல்ஏ தாக்கு

3 hours ago 1

கடலூர்: கடலூர் மாவட்டம் புலியூர் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி அரசியல் பயிலரங்கம் அக்கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார். உலகத்திற்கே ஆலோசனை வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க தமிழகத்திற்கு ஆலோசனை சொல்வதையும், அறிவுரை சொல்வதையும் ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அவர் மீறுவார் என்று சொன்னால் அவரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிலைப்பாடு. பல்வேறு திட்டங்களுக்கும், சாலை பணிகளுக்கும் இடங்களை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மக்களிடம் எதிர்ப்பு இருக்கும்போது அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார் ஆளுநர்: வேல்முருகன் எம்எல்ஏ தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article