தாது மணல் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரம் கேரள முதல்வர் மகளிடம் சென்னையில் விசாரணை

3 months ago 17

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூருவில் எக்சாலாஜிக் என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முன் எர்ணாகுளத்திலுள்ள சிஎம்ஆர்எல் என்ற தாது மணல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் இந்த நிறுவனம் வீணா விஜயனின் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த விசாரணையை கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடியை விசாரிக்கும் தீவிர மோசடி தடுப்பு அலுவலகம் ஏற்றுக் கொண்டது. இந்த அமைப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்திலும் மற்றும் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள கேரள அரசின் தொழில் அபிவிருத்திக் கழகத்திலும் விசாரணை நடத்தியது. ஆனால் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து 10 மாதங்கள் ஆகியும் வீணா விஜயனிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

இந்நிலையில் வீணா விஜயனிடம் தீவிர மோசடி தடுப்பு அலுவலகம் விசாரணை நடத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து வீணா விஜயனிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடைபெற்றது. இதன்பின் வீணா விஜயனை அதிகாரிகள் விடுவித்தனர். பினராயி விஜயனின் மகளிடம் விசாரணை நடத்தியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தாது மணல் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரம் கேரள முதல்வர் மகளிடம் சென்னையில் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article