
ஆக்ரா,
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகால் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எனவே எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டா ஜாமன் என்ற இளம்பெண் தாஜ்மகாலைச் சுற்றிப்பார்க்க இந்தியா வந்திருந்தார். ஆனால் அவருக்கு மக்கள் கூட்டம் இல்லாமல் தனிமையாக அதனை சுற்றிப்பார்க்க ஆசை. எனவே அதிகாலை 4 மணிக்கே முதல் ஆளாக அங்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு சுற்றித்திரிந்த மயில், பறவைகளைத் தன்னந்தனியாகக் கண்டு ரசித்தார்.
இதனை அவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அது வைரலாகி லட்சக்கணக்கானோரின் விருப்பங்களைப் பெற்று உள்ளது. மேலும் சிலர் இது தாஜ்மகாலா? அல்லது சொர்க்கமா? எனவும், தாஜ்மகாலை வித்தியாசமான கோணத்தில் காட்டி இருப்பதாகவும் கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.