தா.பழூர், ஜூலை 4: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி சிவாலயத்தில் வரும் 7ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, அனுஞ்சை, விக்னேஸ்வரா பூஜை, புண்யகாவசனம், கணபதி ஹோமம், தனபூஜை, கலசாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை ரிஷோக்ன ஹோமம், பிரவேசபலி, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆறு நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ஆறாம் நாளான வரும் திங்கட்கிழமை கலச கும்பாபிஷேகம், மூலவருக்கு கும்பாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.
The post தா.பழூர் சிவாலயத்தில் வாஸ்து சாந்தி பூஜை appeared first on Dinakaran.