தா.பழூர் அருகே காளியம்மன் திரு நடன வீதியுலா: பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

5 days ago 2

தா.பழூர் மே 16: தா.பழூர் அருகே அருள்மொழி கிராமத்தில் மகா மாரியம்மன் மற்றும் மகாகாளியம்மன் ஆலயத்தில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காளியம்மன் திரு நடன வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒன்பதாம் தேதி மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், அன்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி பால்குடம், அலகு காவடி உள்ளிட்டவைகளை கொள்ளிடம் கரையில் இருந்து எடுத்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து, அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதில் கூடி இருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி பரவசத்தில் கோஷங்களை எழுப்பியவாறு கைகளை உயர்த்தி அம்மனை வழிபட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு காளியம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த காளியம்மன் வீதி உலாவானது காப்பு கட்டி விரதம் இருந்த நபர், அம்மன் சிரசு உடலை அணிந்து அருள்வாக்கு கூற, வீதிகளில் உள்ள வீடுகள் தோறும் வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மகாகாளியம்மன் தன் இருப்பிடத்தை அடைதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், ஊர் பொதுமக்கள், கோவில் பூசாரி, இளைஞர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post தா.பழூர் அருகே காளியம்மன் திரு நடன வீதியுலா: பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article