தவெக மாநாட்டு திடலில் நொறுக்கப்பட்ட நாற்காலிகள்

2 weeks ago 4

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று முன்தினம் மாலை தவெக முதல் மாநில மாநாடு நடந்தது. இதில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து காலையிலேயே வந்து காத்திருந்த ரசிகர்கள், தொண்டர்களுக்கு குடிநீர், உணவு வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லாததால், மாநாட்டுக்கு வந்த சிலர் அதை உடைத்து சேதப்படுத்தினர். தடுப்புகளும் உடைத்து எறியப்பட்டன. போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய தொண்டர்கள், போலீசார் மற்றும் பவுன்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநாடு முடிந்து சென்றபோது மாநாட்டு திடலில் இருந்த ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. இதனால் மாநாடு நடைபெற்ற இடமே போர்க்களம் போல் காணப்பட்டது. மாநாடு நடந்த இடத்தில் உள்ள குப்பைகளையும், உடைத்து சேதப்படுத்தப்பட்ட பொருட்களையும் தவெகவினர் அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டுள்ளனர்.

The post தவெக மாநாட்டு திடலில் நொறுக்கப்பட்ட நாற்காலிகள் appeared first on Dinakaran.

Read Entire Article