தவறான தகவலை பரப்பிய புகாரில் ரூ.43 கோடி அபராதம் செலுத்திய எலான் மஸ்க்.. பிரேசிலில் எக்ஸ் வலைதளம் மீதான தடை நீக்கம்..!!

3 months ago 21

பிரேசில்: பிரேசிலில் ஒரு மாதத்திற்குப் பிறகு எக்ஸ் வலைதளம் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க். முன்னதாக அதிபர் தேர்தலின்போது முடக்கப்பட்ட எக்ஸ் தளங்கள் சட்டவிரோதமாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் எக்ஸ் தளம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அந்நாட்டில் நடந்த உச்சநீதிமன்ற விசாரணையில் பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கான பிரதிநிதியை நியமிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்ததால் பிரேசிலில் எக்ஸ் தளம் மொத்தமாக தடை செய்யப்பட்டது. மேலும் இந்த தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அந்த அபாரதத் தொகையை தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது.

தவறாக அனுப்பப்பட்ட தொகையை மீண்டும் எலான் மஸ்க்குக்கே அனுப்பி வைக்கும்படி பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த இடியாப்ப சிக்கல் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ், எக்ஸ் தளம் பிரேசிலில் மீண்டும் செயல்படத் தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் எக்ஸ் சேவைகளை பிரேசில் மீட்டெடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

The post தவறான தகவலை பரப்பிய புகாரில் ரூ.43 கோடி அபராதம் செலுத்திய எலான் மஸ்க்.. பிரேசிலில் எக்ஸ் வலைதளம் மீதான தடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article