'தளபதி 69' படப்பிடிப்பை விஜய் மீண்டும் எப்போது தொடங்குவார்? - வெளியான தகவல்

2 months ago 13

சென்னை,

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படமாகும். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இப்படத்திற்கு பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சி துவங்கியுள்ள விஜய், கடந்த 27-ம் தேதி தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார்.

இதனால் தளபதி 69 படப்பிடிப்பில் ஈடுபடாமல் இருந்தார். இந்நிலையில், விஜய் மீண்டும் எப்போது 'தளபதி 69' படப்பிடிப்பை தொடங்குவார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 4-ம் தேதி விஜய் 'தளபதி 69' படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article