'தளபதி 69' படத்தில் இணையும் நடிகை மமிதா பைஜு

3 months ago 32

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் 'தி கோட்'. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். 'தளபதி 69' படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். நேற்று முதல் நாளை வரை இப்படத்தில் நடிக்க உள்ள சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்த படத்தில் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் 3-வது அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

'தளபதி 69' படத்தில் பிரபல நடிகை மமிதா பைஜு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இவர் 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

We are happy to 'OFFICIALLY' announce that Mini Maharani #MamithaBaiju joins #Thalapathy69 cast #Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @hegdepooja @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/PNwYBqCAiS

— KVN Productions (@KvnProductions) October 2, 2024
Read Entire Article