தலை தீபாவளி கொண்டாடிய வரலட்சுமி சரத்குமார்

2 months ago 16

சென்னை,

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டக்கோழி-2, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

வரலட்சுமி சரத்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது வரலட்சுமி அவருடைய கணவரோடு தலை தீபாவளி கொண்டாடி உள்ளார். வரலட்சுமியின் தீபாவளி கொண்டாட்டத்தில் சரத்குமாரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். சரத்குமாரும் ராதிகாவும் தீபாவளி பரிசுகளை வரலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் வழங்கினர்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வரலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read Entire Article