தரம் குன்றிய 650 ஹெக்டேர் அலையாத்தி காடுகள் மீட்பு: அமைச்சர் பொன்முடி தகவல்

5 hours ago 2

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஈரோடு கிழக்கு வி.சி.சந்திரகுமார் (திமுக) பேசுகையில், “மரக்கன்றுகள் 6 மாத பருவத்தில் நடும் போது ஆடு மாடுகள் கன்றுகளை சாப்பிட்டு சேதப்படுத்தும் நிலை உள்ளது. சீனாவில் 5 ஆண்டுகள் வரை மரம் வளர்த்து அதன் பின் வேறு இடங்களில் நடப்படும் முறை தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்படுமா?’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் 650 ஹெக்டேர் தரம் குன்றிய அலையாத்தி காடுகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. 310 ஹெக்டேரில் புதிய காடுகளில் 12 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வனத்துறையால் 8.3 லட்சம் அலையாத்தி வகை தாவர இனங்கள் நடப்பட்டுள்ளது. மரகன்றுகள், மரங்கள் அனைத்து இடங்களில் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோரங்களில் கடல் அரிப்பை தடுக்க பருத்தி, பனை, முந்திரி போன்ற மரங்கள் 288 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பட்டுள்ளது” என்றார்.

The post தரம் குன்றிய 650 ஹெக்டேர் அலையாத்தி காடுகள் மீட்பு: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article