“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

4 months ago 10

சென்னை : “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி எனப் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.ஒன்றிய அரசு திணிக்க முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.

கல்வி நிதி மட்டுமல்ல ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு சிறப்பு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.நிதி உரிமையை கேட்டால் இந்தியை ஏற்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் மிரட்டுவதா?. தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றை படித்தாலே இது உங்களுக்கு புரியும். மாநில அரசு மீது ஒன்றிய அரசு நிகழ்த்தும் பெருங்கொடுமை. நம் வரிப் பணத்தைதான் கேட்கிறோம். எந்த காலத்திலும் திராவிட மாடல் அரசு கல்வி உரிமையை விட்டுக்கொடுக்காது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ரூ.8 கோடியில் கோபாலபுரத்தில் சர்வதேச அளவில் குத்து சண்டை அரங்கம் அமைக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article